நாட்டில் எதிர்வரும் காலங்களில் 180ml கொள்ளளவிலான மதுபான போத்தல்களை தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
பாவனையின் பின்னர் சுற்றுச்சூழலில் ஏராளமான மதுபான போத்தல்கள் விடுவிக்கப்படுவதாகவும், இதனால் சூழலில் 100% வெற்று மதுபான போத்தல்கள் சேருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை தடுக்கும் திட்டம் ஒன்றாகவே 180ml கொள்ளளவு கொண்ட மதுபான போத்தல்களை தடை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.