பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள் தன்னிச்சையாக அதிகரிப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன்காரணமாக,சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும்
அந்த விலைக்கு விற்பனை செய்யப்படவில்லையென நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி ஆயிரத்து 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, சந்தையில் 38 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 60 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் முட்டை விலை மீண்டும் அதிகரிக்குமாயின் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.