இலங்கைக்கு மாத்திரம் வெங்காய  ஏற்றுமதி 

இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தியுள்ளது.

அதற்கமைய இலங்கைக்கு மாத்திரம் வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10,000 மெட்ரிக் டொன் வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அண்டை நாடு என்ற அடிப்படையிலும், பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டும் இந்தியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply