ரஷ்ய இராணுவத்திடம் கேள்வி எழுப்பிய இலங்கைத் தூதுவர்

யுக்ரேனுக்கு எதிரான  ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளில் இலங்கையை சேர்ந்த சில முன்னாள் இராணுவத்தினர் இணைந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பில் ரஷ்யா இராணுவத்திடம் தகவல்களை கோரியுள்ளதாக மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜனிடா லியனகே தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், சில முன்னாள் இலங்கை இராணுவ வீரர்கள் சட்டத்திற்கு முரணாக ரஷ்ய இராணுவத்தில் இணைந்திருக்கலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுப்படுவதன் ஆபத்துக்கள் குறித்து இலங்கை இராணுவத்தினருக்கு விளக்கமளிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முன்னாள் இராணுவத்தினர் இலாபகரமான சலுகைகள் மூலம் ஈர்க்கப்பட்டிருக்கலாம்  எனவும், குறித்த நபர்கள் யுத்த செயற்பாடுகளில் உயிரிழக்கும் போது வழங்கப்படும் இழப்பீட்டுக்கு காணப்படும் உத்தரவாதம் தொடர்பிலும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version