உலக பிரச்சினைகளில் நடுநிலைமையை பேணுமாறு கோரிக்கை  

உலக பிரச்சினைகளில் நடுநிலைமையை பேணுமாறு கோரிக்கை  இலங்கை உலகளாவிய பிரச்சினைகளுக்குள் தலையிட கூடாது என நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்வுள்ளமை தொடர்பில் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் குறித்து இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டில் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

அனைத்து நாடுகளுடனும் இலங்கை சிறந்த இராஜதந்திர உறவுகளை பேண வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version