ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பலர் கோரிக்கை விடுத்துள்ளதாக
நீதியமைச்சர் கலாநிதிவிஜயதாச ராஜபச்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மதிப்பிற்குரிய மகா சங்கத்தினரும் ஏனைய மதத் தலைவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில்
இது தொடர்பில் எதிர்வரும் சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீங்கள் எந்த கட்சி சார்ந்து போட்டியிடுவீர்களா அல்லது சுயாதீனமாகவா என ஊடகவியலாளர்கள் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு
“எமது நாட்டில் எந்த அரசியல் கட்சி மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் அடுத்த தேர்தல் வித்தியாசமான தேர்தலாகவும், தீர்க்கமான தேர்தலாகவும் இருக்கும். கட்சிக்கு ஏற்ப வாக்களிக்கும் வாக்காளர்கள் எதிர்காலத்தில் இருக்க மாட்டார்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில்
மக்கள் சிந்திப்பார்கள்” என பதிலளித்துள்ளார்.