க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்‌ எனவும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபாலினூாடக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்கு 4 லட்சத்து 52 ஆயிரத்து 979 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version