நாடளாவிய ரீதியில் இன்று (22/11) சகல பாடசாலைகளினதும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
கொவிட் பெருந்தொற்றின் காரணமாக நீண்ட கால இடைவேளைக்குப் பிறகு இன்று தரம் 6 முதல் 9 வரையான தரங்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
கடந்த மாதம் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கமைய 3 கட்டங்களின் கீழ் மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
முதலாவது கட்டத்தில் கடந்த மாதம் 21ஆம் திகதி 200 க்கு குறைவான மாணவர்களுடன் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், 2ஆம் கட்டமாக கடந்த 25ஆம் திகதி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 3ஆம் கட்டமாக கடந்த 8ஆம் திகதி தரம் 10 க்கு மேற்பட்ட சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டன.
அந்தவகையில் சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டல்களுக்கு மத்தியில் இன்று சகல தரங்களுக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான விசேட பஸ் சேவையான ‘சிசு சரிய’ பஸ் சேவைகளும் மும்முரமாக வீதிகளில் இயங்குவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
