2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் தாருசலாமில் நடைபெற்ற உயர்குழாம் சந்திப்பொன்றின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.