மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலேசியாவின் கடற்படை அணிவகுப்பிற்கான ஒத்திகையின் போதே 2 ஹெலிகொப்டர்களும் நடுவானில் ஒன்றோடொன்று மோதியுள்ளன.
மலேசியாவின் லுமுட் நகரில் அந்நாட்டு நேரப்படி இன்று(23.04) காலை 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரு ஹெலிகொப்டரின் இறக்கை அருகில் பறந்துகொண்டிருந்த மற்றைய ஹெலிகொப்டருடன் மோதியதனால், இரண்டு ஹெலிகொப்டர்களும் தரையில் வீழ்ந்து நொறுங்கியுள்ளன.
விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதறற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.