களுத்துறை- மொரகஹஹேன பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர்.
மிரிஸ்வத்த பிரதேசத்தில் டயர் தொழிற்சாலையொன்றிற்கு அருகில் இன்று (23)அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கட்டளையை மீறி முச்சக்கரவண்டி பயணித்ததுடன் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முற்சித்து தப்பி சென்றுள்ளனர்.
இதன்பின்னர் அருகிலிருந்த பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முச்சக்கரவண்டியை நிறுத்த முற்பட்டபோதிலும் மீண்டும் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்பின்னர் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.