வாக்கெடுப்பு இன்று

2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22/12) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத்திட்டம் கடந்த 12ஆம் திகதி நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் சபையில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 13ஆம் திகதி தொடங்கிய இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் 7ஆவது நாளை எட்டியுள்ளது. அதன்படி குழுநிலை விவாதம் நாளை (23/11) தொடங்கி டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த வரவு – செலவுத் திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் நேற்று (21/11) கூடி வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு, ஒருமனதாக முடிவு செய்ததாக கட்சியின் சட்டத்துறை பணிப்பாளர், சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version