‘நேரடி விமான சேவை அதிகரிக்கப்படும்’ – பிரசன்ன

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான நேரடி விமான சேவைகளை எதிர்காலத்தில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு நேற்று (21/11) தெரிவித்தது.

தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாரத்திற்கு 100க்கும் மேற்பட்ட விமானங்களை 11 இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இயக்கி வருகிறது.

கொவிட்-19 தொற்றுநோய் பரவலின் காரணமாக இடை நிறுத்தப்பட்ட விமான பாதைகளின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய விரைவில் மீண்டும் முழுமையான சேவைகள் தொடங்கும் என்றும் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதேவேளை நவம்பர் 1 முதல் 18 வரை நாட்டிற்குள் நுழைந்த 24,567 சுற்றுலாப் பயணிகளில் 18, 808 (76 சதவீதம்) பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

‘நேரடி விமான சேவை அதிகரிக்கப்படும்' - பிரசன்ன
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version