T20 உலக கிண்ணத்தில் உசைன் போல்ட்..! 

2024ம் ஆண்டிற்கான இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தூதராக (பிராண்ட் அம்பாசிடர்) உலகின் அதிவேக மனிதன் உசை போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், உலகின் அதிவேக மனிதனாக சாதனை படைத்த, ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் உலக கிண்ண தொடரின்  துதராக (பிராண்ட் அம்பாசிடர்) நியமிக்கப்பட்டுள்ளார். 

உசைன் போல்ட், ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கப்பதக்கம் வென்றவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 

இந்த விடயம் தொடர்பில் உசைன் போல்ட் தெரிவித்ததாவது,

” கிரிக்கெட் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கும் மேற்கிந்திய தீவுகளில் இருந்து வந்தவன் என்பதால், கிரிக்கெட்டிற்கு என் இதயத்தில் எப்போதும் சிறப்பிடமுண்டு. உலகளவில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பங்களிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்” என தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version