ஜப்பானிய ‘நிஹொன்பஷி’ உணவகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிறுவப்பட்ட “நிஹொன்பஷி” (Nihonbashi)ஜப்பானிய உணவகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (24) மாலை திறந்துவைத்தார்.

1995 ஆம் ஆண்டு காலி முகத்திடல் டெரஸில் நிறுவப்பட்ட முதலாவது நிஹொன்பஷி ஜப்பானிய உணவகம், பிரபல சமையல் கலைஞரான தர்ஷன முனிதாஸவினால் நாட்டிற்கு அளிக்கப்பட்ட முன்னணி உணவகமாகும்.

கடந்த 29 ஆண்டுகளாக, இந்த உணவகம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுவையான ஜப்பானிய உணவை ருசிக்கும் வாய்ப்பை வழங்
கியது.

தற்போது இந்த உணவகம் காலிமுகத் திடல் நகர வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version