ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை ‘ஏ’ குழாம் அறிவிப்பு 

இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால் இந்த தொடருக்கான 14 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையில் 5 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரும், நான்கு நாள் டெஸ்ட் போட்டியொன்றும்  நடைபெறவுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் ஹம்பாந்தோட்டையில் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

மேலும், நான்கு டெஸ்ட் போட்டி கொழும்பில் எதிர்வரும் மாதம் 11ம் திகதி நடைபெறவுள்ளது. 

இலங்கை ‘ஏ’ குழாம்: சஹான் ஆராச்சிகே (அணித் தலைவர்), நுவனிது பெர்னாண்டோ (உப தலைவர்), லஹிரு உதார, நிஷான் மதுஷ்க, கமில் மிஷார, பவன் ரத்நாயக்க, சாமிக்க கருணாரத்ன, துஷான் ஹேமந்த, சாமிக்க குணசேகர, மொஹமட் சிராஸ், வனுஜ சஹான், மினோத் பானுகா, அஹான் விக்கிரமசிங்க, நிமேஷ் விமுக்தி 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version