ICC ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றில் விளையாடுவதற்காக சிம்பாப்வே சென்றுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மூன்று வீராங்கனைகளுக்கு கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்று உறுதியான மூவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ICC தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை அணியில் உள்ள ஏனைய வீராங்கனைகளுக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்த நிலையில், அவர்கள் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும், எனினும் அவர்கள் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப்போட்டியில் குழு A இல் இடம் பெற்றுள்ள இலங்கை அணி நாளை (23/11) தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்தாடவுள்ளது.
அதற்கமைய இலங்கை அணியில் உள்ள ஏனையவர்களுக்கு நாளை மீண்டும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என ICC தெரிவித்துள்ளது.
