தியத்தலாவ Foxhill கார் விபத்து – இராணுவத்தின் விசேட அறிவிப்பு

தியத்தலாவ Foxhill கார் பந்தய விபத்து குறித்து பதிவான காணொளிகள்
ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையிலான 07 பேர் கொண்ட குழுவினால் விசாரணை இடம்பெறுவதாக
இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் 10ஆம் திகதி இராணுவத் தளபதியிடம்
கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 21ஆம் திகதி தியத்தலாவயில் இடம்பெற்ற Foxhill கார் பந்தயத்தின் ​போது
இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் 20 மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply