தம்பலகாமம் – பாரதிபுர படுகொலை – நீதிமன்ற தீர்ப்பு?

தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்
ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாகவிருந்த 08 தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் சட்டவிரோத ஒன்றுகூடலில் இருந்ததாக திருகோணமலை பாரதிபுரத்தில் அப்போது பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியொன்றில்
இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா
அதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

ஆட்கொலை தொடர்பிலான சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளிகளாக இருந்தார்கள்
என்ற குற்றசாட்டில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply