யாழில் புதிய கட்சி தொடக்கம்

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று(29.04) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, கட்சியின் உப தலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளதர்.

யாழ் ஊடக அமையத்தில்  இன்று(29.04) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் புலேந்திரன் உதயகுமார் என்பவரை தலைவராக கொண்டு கடந்த 2021ம் ஆண்டு முதல்  நாம் வெகுஜன அமைப்பாக செயற்பட்டு வருகின்ற அமைப்பானது, கல்வி, வாழ்வாதாரம், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல சேவைகளை செயற்படுத்தி வருவதாக  உப தலைவர் அப்பையா இராஜவேந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலையில், இன்று முதல் தமது சேவைகளை ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தேர்தல் தொடர்பில் எவ்வித நோக்கமில்லை எனவும், தேர்தல் காலத்திலேயே இறுதி முடிவினை எடுப்பதாகவும் கட்சியின் உப தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழ் இனம்சார்ந்த பிரச்சினைகளுக்காக பல கட்சிகளும் குரல் கொடுத்து கொண்டிருக்கின்ற நிலையில், அத்தகைய கட்சிகளின் கண்ணுக்கு புலப்படாத பொதுமக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சேவையாற்றுவது கட்சியின் நோக்கமாகும் எனவும்  கட்சியின் உப தலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version