கெஹலியவின் ரிட் மனு பரிசீலனை ஒத்திவைப்பு 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான வழக்கு மே 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனுவை  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதா அல்லது இல்லையா எனும் தீர்மானம் இன்று(30.04) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இருப்பினும், எதிர்வரும் மே 07 ஆம் திகதி வரை குறித்த தீர்மானத்தை ஒத்திவைக்கப்பதாக மேன்முறையீட்டு நீதிபதி டி.என். சமரகோன் இன்று(30.04) அறிவித்தார். 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் பலமுறை நீடிக்கப்பட்டிருந்தமை  சுட்கக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply