டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க இயலாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்திலேயே பஸ் கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று(01.05) முதல் அமுலாகும் வகையில் டீசல் உட்பட எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.