உமாஓயா அபிவிருத்தி திட்டத்தால் பயனடையும் மின்சார சபை

உமாஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் நாளொன்றுக்கு மின்சார சபைக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமாத காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட உமாஓயா திட்டத்தால் இதுவரை சுமார் 1,500 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.

2007 நவம்பர் 27ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய, உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் 2008 ஏப்ரல் 21ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் இந்ந திட்டம் அண்மையில் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version