தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள்

தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.  

அதற்கமைய தென் மாகாண புதிய ஆளுநராக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நசீர் அஹமட் ஆகியோர் இன்று (02.05) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் செயலாளார் சமன் ஏக்கநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டிருந்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version