மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட  பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள  வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜீ. விஜேசூரியவிடம்  தெரிவித்துள்ளார். 

இருப்பினும், தட்டுப்பாடுகள் நிலவும் மருந்துகளுக்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும் அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version