புத்தளம் – பாலாவி பகுதியில் இரு வலம்புரி சங்குகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த சங்குகளை எட்டு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர் முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளத்கொஹூபிட் டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வலம்புரி சங்குகளை தனது பெற்றோர் வீட்டில் வைத்திருந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.