பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் (2.5 -3.0) மற்றும் அலையின் கால அளவு (12 – 16) வினாடிகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.