நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதை தடுத்து கடந்த மாதம் 4ம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவிற்கு எதிராக நீதி அமைச்சரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி.என். சமரகோனினால் இன்று(07.05) நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பான உத்தரவை மாவட்ட நீதிமன்றமே கோர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.