ஜனாதிபதி – நிக்கொலாய் பட்ருஷெவ் சந்திப்பு

ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்று (22/11) சந்தித்தார்.

குறித்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இருதரப்புத் தொடர்புகள், 2022 பெப்ரவரி 19அம் திகதியுடன் 65 ஆண்டுகள் பூர்த்தி அடைவது தொடர்பில், நிக்கொலாயின் இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக, ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

அத்துடன் ரஷ்யாவின் GSP முறைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி உற்பத்திகளை விரிவுபடுத்த இலங்கை எதிர்பார்ப்பதாகவும், கொழும்புத் துறைமுக நகரம், மின்சக்தி, மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், விவசாயத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கு, ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக முன்னிலையாவது தொடர்பில் ரஷ்யாவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மட்டெரி (Yury Matery), ரஷ்யாவின் பாதுகாப்புச் சபை பிரதி செயலாளர்களான அலெக்சாண்டர் வெனெடிக்டொவ் (Aleksander Vertediktov), ஓலெக் கிராமொல் (Cleg Khramov), ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஐயநாத் கொழம்பகே ஆகியோரும் ரஷ்யாவின் இராஜதந்திர அதிகாரிகள் சிலரும், கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி - நிக்கொலாய் பட்ருஷெவ் சந்திப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version