தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர நேற்று (08) கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து இன்று காலை(09) அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனித பாவனைக்குதவாத மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.