முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (10) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய தன் பின்னர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்புரிமை நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும் வெற்றிடமாகியுள்ள பதவிக்கு பொருத்தமான பெண் ஒருவரை நியமிக்குமாறு இலங்கை மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர் மன்ற தலைவி, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.