தேயிலைத் தோட்டங்களுக்கான உர மானியம் அதிகரிப்பு தேயிலைத் தோட்டங்களுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேயிலைத் தோட்டங்களுக்கான உர மானியத்தை 10 ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நேற்று(10.05) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம், இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதுவரை 10 ஏக்கருக்கு உர மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் அதனை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.