மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடனும் நுங்குத் திருவிழா இன்று(10.05) காலை 10 மணியளவில் மன்னாரில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் முன்பாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இது தொடர்பாக உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தின் பாரம்பரியமான பனை மரங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்குள்ளது.
அழிந்துபோகும் பனை மரங்களை யாவரும் அக்கறையுடன் பாதுகாக்க வேண்டியுள்ளது என வலியுறுத்தினர்.
பனம் பொருள் தொடர்பான மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் காட்சிப்படுத்தலும் விற்பனை நிலையமும் மன்னார் மாவட்டச் செயலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே பொது மக்களும் பாவனையாளர்களும் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்குடனும், மன்னார் வளத்தின் பனை மரங்களின் மகத்துவத்தை எடுத்தியம்பும் ஒரு நோக்குடனும், இன்று இந்த நுங்குத் திருவிழாவை நடாத்த தீர்மானித்துள்ளளர்.
