சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வட்டி வீதங்களில் மாற்றம்? 

சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்காக சுமார் 80 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பணத்திற்காக 105 பில்லியன் ரூபா கடனை திறைசேரியிலிருந்து செலுத்த உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும், பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற கோரிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பணப்புழக்கம் தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கமைய தெளிவான அறிக்கை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version