ரஷ்ய – உக்ரைன் போரில் முன்னாள் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விசேட தகவல்

ரஷ்ய – உக்ரைன் போரில் இராணுவத்துடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இணைந்து கொள்வதற்கு காரணமாவிருந்த ஆட்கடத்தற்காரர்களால் தொடர்பில் விசேட பிரிவிற்கு 77 தொலைபேசி அழைப்புகள் கிடைப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு முதல் குறித்த விசேட பிரிவு செயற்படத் தொடங்கியது.அன்றிலிருந்து
36 மணித்தியாலங்களுக்குள் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கூலிப்படைகளாக அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் சென்ற திகதி
அவர்களுடன் பயணித்த நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்க முடியும் என அமைச்சு கூறிகிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112 441146 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்க முடியும்
முடியும் எனவும், தகவல் வழங்காதவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version