காணி உறுதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களுக்கு விசேட வேண்டுகோள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவணங்களை வழங்கி உறுதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர்களுமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27,595 உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தினை விரைவில் நிறைவுசெய்து மக்களுக்கான உறுதிகளை வழங்க நடடிவக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version