தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான கப்பல் சேவையை முன்னதாக அறிவித்த திகதியில் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை(13.05) ஆரம்பிக்கப்படவிருந்த குறித்த கப்பல் சேவை எதிர்வரும் 17ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் கப்பல் சேவையயை மீள ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்கும் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.