மருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கொள்வனவு கோரிக்கை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
போலி பதிவுச் சான்றிதழ்களை தவிர்ப்பதற்காக இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையால் அங்கீகரிக்கப்படும் சகல மருந்துகளுக்கும் விசேட ஸ்டிக்கர் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை ஒரு மாதத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.