A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு? 

க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று(15.05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நேற்றைய தினம்(15.05) நிறைவடைந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சுமார் 4 மாதங்கள் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version