கொவிட் இறப்புகளின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தி வருவதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இச்சூழ்நிலையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அதனை தீவிரமாக கவனத்தில் கொள்வது முற்றிலும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் தொற்று நோயியல் பிரிவில் விசேட தனி குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதற்கு அமைய, கொவிட் இறப்பு எண்ணிக்கை ஏன் அதிகரித்தது என்பதை அக்குழு ஆய்வு செய்யவுள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் அக்குழுவின் அறிக்கையைப் பெறுவோம் என மேலும் கூறினார்.