நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளுக்கிடையிலான நேரடி விவாதத்திற்கான திகதிகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு கடிதமொன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையேயான விவாதம் எதிர்வரும் 27ம் திகதிக்கும் 31ம் திகதிக்கும் இடையில் நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இரு கட்சிகளின் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க இடையிலான விவாதம் எதிர்வரும் ஜூன் மாதம் 03ம் திகதிக்கும் 07ம் திகதிக்கும் இடையில் நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.