LPL அணிகளின் முதற்கட்ட வீரர்கள் விபரம்

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நாளை(21.05) கொழும்பில் நடைபெறவுள்ளது. அணிகள் தாம் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் புதிதாக கையொப்பமிட்டுள்ள வீரர்கள் விபரங்கள் இன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா அந்த அணியில் இருந்து விலகிய நிலையில் கொழும்பு அணியில் ஒப்பந்தம் செய்யபப்ட்டுளார். குஷல் மென்டிஸை ஜப்னா அணி எடுத்துள்ள நிலையில் அவரே தலைமை தங்குவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த முறை ஏலம் மூலம் ஜப்னா அணியினால் வாங்கப்பட்ட விஜயகாந்த் வியாஸ்காந்த் தொடர்ந்தும் ஜப்னா அணியில் தொடர்கிறார்.

அணிகளில் வீரர்கள் இடம்பெற்றுள்ள விதம்

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், அஷமதுல்லா ஓமர்ஷாய், நூர் அஹமட்

கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, நிபுன் தனஞ்சய, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ்

தம்புள்ள தண்டேர்ஸ் – டில்ஷான் மதுஷங்க, நுவான் துஷார, டுஸான் ஹேமந்த, இப்ராஹிம் ஷர்டான், முஸ்டபைஸூர் ரஹ்மான்

கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, லசித் க்ரூஸ்புள்ளே, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ்

பி லவ் கண்டி – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், கைல் மேயெர்ஸ்

Social Share

Leave a Reply