புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (21) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

வானிலை தொடர்பில் அவதானம் செலுத்தி எதிர்வரும் நாட்களில் விடுமுறை குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இன்றைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply