இந்தியா, குஜராத், சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்துள்ளதாக கூறப்படும் நால்வரும் இலங்கையர்கள் என மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL கிரிக்கெட் தொடருக்காக மூன்று அணிகள் குறித்த விமான நிலையம் ஊடாக வருகை தந்த தருணத்தில் இந்த கைது நடைபெற்றுள்ளது. இவர்கள் ஏன் வருகை தந்துள்ளார்கள் என்பது தொடர்பில் உரிய தகவல் கிடைக்கவில்லை எனவும், இனம் தெரியாத இடம் ஒன்றிற்கு இவர்கள் நால்வரும் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக குஜராத் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களது கைதை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிரிக்கப்பட்டுள்ளது.