வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் – 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் பல லட்சம் பக்தர்கள் புடைசூழ மிகச் சிறப்பான முறையில் இன்று(20.05) நடைபெற்றுவருகின்றது.

பல்லாயிர கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை அதிகாலையில் இருந்து நிறைவேற்றி வருகின்றனர். கொழும்பு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்டத்தினை சேர்ந்த அதிகளவான பக்தர்கள் இம்முறை வற்றாப்பளை கண்ணகி அம்மனை தருசிக்க வருகை தந்தனர் என முல்லைதீவு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version