இலங்கை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் பங்கேற்பதற்காக, அமெரிக்கா செல்வதற்கான விசாவைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
குசல் மெண்டிஸ் எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவில் உள்ள இலங்கை அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த போதிலும், குசல் மெண்டிசுக்கு விசாவைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அமெரிக்கா செல்ல இயலவில்லை.
அமெரிக்கத் தூதரகத்திற்குத் தேவைப்படும் கூடுதல் தகவல்களால் விசா தாமதமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024ம் ஆண்டிற்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 01ம் திகதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது.