‘இராணுவ கெடுபிடிகள் அதிகம்’ – கஜேந்திரன் MP

மாவீரர்களை நினைவு கூர பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வீதிகளில் கூட துப்புரவு பணிகளை செய்ய முடியாத அளவிற்கு இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாக இருக்கிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை இடித்து அதன் மேல் முகாமிட்டு ஒரு அநாகரிகமான மற்றும் கேவலமான செயலில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வீதிகளில் எமது துப்புரவு செய்யும் பணிகளிலும் அவர்கள் இடையூறுகளையும் குழப்பும் வேலைகளையும் செய்து வருகின்றனர். இதை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, ஒரு உரிமையோடு நாம் எதையும் செய்ய முடியாத அளவுக்கு ஒரு மோசமான நிலைமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இன்று இந்த நிகழ்வுகளுக்கு எத்தனை நெருக்கடிகள் இருந்தாலும் எங்களுடைய விடுதலைப் பயணத்தில் நிச்சயமாக ஒருநாள் அரசியல் ரீதியாக இந்த மாவீரர் தினத்தை நினைவு கொள்ள கூடிய ஒரு சுதந்திரமான சூழலை உருவாக்குவோம் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது என்றும் அதற்கு சர்வதேச சட்டங்களில் இடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் மாவீரர் துயிலும் இல்லத்தை உடைத்தெறிந்து அதில் முகாமிட்டிருக்கும் படைகள் உடனடியாக அதிலிருந்து வெளியேற வேண்டும் என குறிப்பிட்ட அவர், ஒரு நாள் நாம் ஈட்ட போகிற அரசியல் வெற்றி ஊடாக அவர்கள் இங்கிருந்து வெளியேறி மீண்டும் மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கக் கூடிய ஒரு சூழல் உருவாகும் என்றும் அது ஜனநாயக ரீதியான முறையிலே அந்த சூழலை உருவாக்குவோம் என்றும் கூறினார்.

ஆனால் இன்று இங்கு வீதியிலுள்ள புல்லை கூட வெட்ட முடியாத அளவிற்கு இராணுவ கெடுபிடிகள் மோசமாக இருக்கின்றது எனவும் எமது கருத்தை கூட சொல்ல முடியாத அளவிற்கு இராணுவ உளவுத் துறையினர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் அடக்குமுறைகள் அதிகமாக காணப்படுவதாகவும் மேலும் கருத்து தெரிவித்தார்.

‘இராணுவ கெடுபிடிகள் அதிகம்' - கஜேந்திரன் MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version