ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதான சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் வருடம் ஜனவரி 12ஆம் திகதி (12.01.2022) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூவர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (23/11) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றப்பத்திரிகை தமிழில் வாசிக்கப்பட வேண்டும் என தெரிவித்ததையடுத்து, குற்றப் பத்திரிகையைத் தமிழில் மொழிபெயர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 10 பேரின் சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலும் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் - வழக்கு ஒத்திவைப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version