பணவீக்கம் அதிகரிப்பு..!

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி நாட்டின் மொத்த பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2.5% ஆக பதிவான மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.7% ஆக பதிவாகியுள்ளது.

,2024 மார்ச் மாதத்தில் 5.0% ஆக இருந்த உணவு பணவீக்கம், 2024 ஏப்ரல் மாதத்தில் 3.3% ஆகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, 2024 ஆண்டு மார்ச் மாதத்தில் 0.7% ஆக குறைவடைந்திருந்த உணவு அல்லா பணவீக்கம் ஏப்ரலில் 2.3% ஆக உயர்வடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version