காசா சிறுவர் நிதியத்திற்கு 40 மில்லியன் ரூபா நன்கொடை

பேருவளை, சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கம், சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும்  ஆபரண வர்த்தகர்கள் சங்கம், “ஜெம் ஸ்ரீலங்கா” சங்கம் மற்றும் சீனங்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்களின் பங்களிப்புடன் காசா சிறுவர் நிதியத்திற்கு  ரூ. 40,198,902  நன்கொடையாக வழங்கப்பட்டது.

இதற்கான காசோலை கடந்த 21ம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தக சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீலினால் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் பேருவளை பிரதேச வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version